ஹோஸ்டிங் தேர்வு செய்யும் முறைகள்

ஹோஸ்டிங் சம்மந்தமான கேள்விகளும் அதற்கான விளக்கங்களும்

இணையதளம் ஆரம்பிக்க ஆயத்தம் ஆனவர்கள் எந்த ஹோஸ்டிகை தேர்வு செய்வது என்ற குழப்பம் இருக்கும். அதற்க்கான தெளிவான விளக்கத்தை இங்கு தருகிறேன்.

ஹோஸ்டிங்கை தேர்வு செய்யும் முன் ஹோஸ்டிங்கின் பேன்ட்வித் (அலைவரிசை) மற்றும் UPtime வேகம் போன்றவற்றை கவனிக்க வேண்டியிருக்கும்.

ஹோஸ்டிங்கின் வகைகள்

  • 1.பகிரப்பட்ட ஹோஸ்டிங் - Shared Hosting
  • 2.வி.பி.எஸ் ஹோஸ்டிங் - VPs Hosting
  • 3.அர்ப்பணிக்கப்பட்ட ஹோஸ்டிங் - Dedicated Hosting
  • 4.விண்டோஸ் ஹோஸ்டிங் - Windows Hosintg
  • 5.Windows dedicated hosting
  • 6.Wordpress Hosting
  • 7.Cloud Hosting
  • 8.AWS Hosting

பகிரப்பட்ட ஹோஸ்டிங் - Shared Hosting (Linux Hosting)

ஒரே ஐபியில் ஏராளமான இணையதளத்தை இயக்குவதே பகிரப்பட்ட ஹோஸ்டிங் ஆகும். சாதாரணமாக ஒரு நிறுவனத்தை பற்றியோ அல்லது தொழிலை பற்றிய விளங்கங்கள் உள்ள இணையதளம் ஆர்ம்பிப்பவராக இருந்தால் இந்த பகிரப்பட்ட ஹோஸ்டிங்கை தேர்வு செய்து கொள்ளலாம். இதற்க்கான் செலவு மிகவும் குறைவு. அதிகப்படியான பார்வையாளர்களை கொண்டிராத இணையத்திற்கு இது மிகவும் ஏற்றது. உதரணத்திற்க்கு பெரும்பாலான (Static website) நிலையான இணையதளத்திற்கு இது மிகவும் ஏற்றது.

வி.பி.எஸ் ஹோஸ்டிங் - VPS Hosting

சற்று அதிகப்படியான பார்வையாளர்களைக்கொண்ட இணையதளம் வைத்திருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்தது. உதாரணமாக E_Commerce website, Online booking Websites. இது தனிப்பட்ட ஐபி-ஐ வைத்து இயங்கும்.

அர்ப்பணிக்கப்பட்ட ஹோஸ்டிங் - Dedicated Hosting

அதிகப்படியான வேகம மற்றும் தன்னிச்சையான ஐபி மற்றும் அதிகப்படியான பயனாளர்களைக்கொண்ட இணையதளத்திற்கு இந்த ஹோஸ்டிங் சிறந்தது.

விண்டோஸ் ஹோஸ்டிங் - Windows Hosting

உங்களது இணையதளம் .Net-ல் தயாரிக்கப்பட்டிருந்தால் அது இயங்க விண்டோஸ் ஹோஸ்டிங் தேவை.

Unlimited Reseller Hosting

Best Wordpress Plugins

Best Wordpress Themes

Best HTML Templates

Post a Comment

0 Comments