SEO Keywords-ஐ எப்படி தேர்வு செய்வது?
நீங்கள் இணையதளம் ஆரம்பித்து விட்டீர்கள். அடுத்ததாக SEO செய்தால் தான் உங்களது இணையதளம் கூகுளில் தேடும் அனைவருக்கும் தெரியவரும் என்று உங்களது டிசைனரோ, டெவலப்பரோ தெரிவிப்பார். உங்களுக்கு சற்று சந்தேகம் வரும். அது இயற்கையே.. சரி இது சரியா என்று கேட்டால் அவர்கள் சொல்வது சரியே. நீங்கள் SEO செய்தே ஆக வேண்டும். அப்பொழுது தான் முழு பயனும் கிடைக்கும். அப்பொழுது நீங்கள் கவனிக்க வேண்டியது என்னென்ன நடைமுறைகளை அவர்கள் பின்பற்றுகிறார்கள். எவ்வாறு உங்கள் தொழிலுக்கான KEYWORDS-ஐ தேர்வு செய்கிறார்கள். என்றெல்லாம் பார்க்க வேண்டும்.
முதலில் KEYWORDS-ஐ தேர்வு செய்யும் முறை பற்றி கூறுகிறேன்.
KEYWORDS-ஐ தேர்வு செய்யும் போது அது உங்களுடைய தொழில் சம்மந்தமாக இருக்க வேண்டும். (உதாரணமாக -கட்டுமான நிறுவனம் பழனி)
இங்கு கட்டுமான நிறுவனம் பழனி என்பது கீவேர்டு ஆகும்.
இவ்வாறு குறைந்தது 5 முதல் 10 கீவேர்டுகளை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.
ஆங்கிலத்தில் கீவேர்டு எழுதினால் வினைச்சொல் வராமல் எழுதி பழகிக்கொள்ளவும்.
உதரணமாக - CONSTRUCTION COMPANY PALANI -இது சரி
CONSTRUCTION COMPANY IN PALANI - இது தவறு
ஏனெனில் சர்ச் என்ஜின் வினைச்சொல்லை தவிர்தே தேடுதலை தொடங்கும். அப்பொழுது நமது கீவேர்டானது பின்னுக்கு தள்ளப்படும்.
மேலும் கீவேர்டை கூகுள் டிரெண்டில் தேடிப்பார்த்து அடிக்கடி அதில் தேடப்படும் கீவேர்டையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
இவ்வாறாக கீவேர்டை தேர்வு செய்து வைத்துக்கொண்டு உங்களது தொழிலை இணையதில் மேம்படுத்தலாம்.
0 Comments
Thank your for your valuable comments.